இந்தியா, பிப்ரவரி 26 -- பாகற்காய் சற்று கசப்பு தன்மை அதிகமாக உடைய ஒரு காய்கறி ஆகும். ஆனால் பாகற்காய் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், குடல் புழு பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கும் மிகுந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பாகற்காய் சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடிக்காத ஒரு விஷயமாகும். குறிப்பாக குழந்தைகள் என்றால் பாகற்காய் பக்கமே திரும்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு பாகற்காயின் கசப்பு தன்மை அவர்களை வெறுக்க வைத்துள்ளது. ஆனால் பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நமது உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருவதாக ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே பாகற்காய் சமைக்கும்போது அதன் கசப்புத் தன்மை தெரியாத அளவிற்கு சமைக்க வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. இதில் பாகற்காய் குழம்பை எப்படி செய்வது என்பதை இங்கு கொ...