இந்தியா, மே 1 -- ஜம்மு-காஷ்மீரன் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவுடன் விவாதித்ததாகவும், இந்த தாக்குதலை நடத்தியவர்கள், திட்டமிட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில், "அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் @SecRubio உடன் நேற்று பஹல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதித்தேன். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மற்றும் திட்டமிட்டவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஓ.சி) பாகிஸ்தான் போர்நிறுத்த மீறல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை ...