இந்தியா, ஏப்ரல் 25 -- காஷ்மீரில்,பைசரன் பள்ளதாக்கில் ஏப்ரல் 22ம் தேதியன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில் அரசின் குறைப்பாடுகள் இருப்பதையே பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது

இத்தீவிர தாக்குதலை உளவுத்துறை கணிக்க தவறிவிட்டது. உளவுத்துறை செய்திகள் அமர்நாத் யாத்திரையை ஒட்டி தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளது. பகல்காம்-பைசரன் பள்ளத்தாக்கில், தீவிரவாதிகள் தாக்கும் வாய்ப்பு பற்றி எந்த செய்தியும் இல்லை. இது உளவுத்துறையின் செயல் குறைபாடு ஆகும்.

அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும், அந்த இடத்தில் ஒரு பாதுகாப்பு படைவீரர் கூட இல்லை. மத்தி...