பஹல்காம்,டெல்லி, ஏப்ரல் 22 -- பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் படிக்க | திருமணம் முடிந்து ஆறே நாட்கள்.. பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்டினன்ட் வினய் நர்வால்!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, சவுதி அரேபியா அளித்த அதிகாரப்பூர்வ விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. அவர் இன்று இரவு இந்தியாவுக்குப் புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை வருவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் முதலில் நாளை இரவு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | 'முஸ்லிம் இல்லை என்பதால் சுட்டுக் கொன்றார்களா?' பஹல்காம் தாக்குதலை விவரித்த இறந்தவரின் மனைவி!

ஜம்மு காஷ்மீரின் பஹல்க...