இந்தியா, ஜூன் 14 -- பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை கண்டுகொள்ளாத அரசுகள் என்று சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.

எண்ணூரைப் பாதுகாப்போம் அமைப்பினர், "Aquaculture land grab - இறால் பண்ணைகளின் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள்" என்ற தலைப்பில் செய்த ஆய்வில் 309 ஏக்கரில் இறால் பண்ணைகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருப்பதும், அதில் 62 ஏக்கரில் மேய்க்கால் மற்றும் கழுவேலி புறம்போக்கு பகுதியில் சட்ட விரோதமாக இயங்குவதாகவும் ஆதாரங்கள், புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி தாலுகாவில் உள்ள தங்கல் பெரும்புலம் பகுதியில் அதிகளவில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் வாழ்க்கை கால்நடை மேய்ப்பிலும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களை நம்பியுள்ளது. அ...