இந்தியா, மே 22 -- இந்தக் கோடையை சமாளிக்கவும், கோடைக் காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக்குகள் ஏற்படாமலும் தடுக்க உதவும் பானங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான் நல்லது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் உடலுக்கு நீர்ச்சத்தைக் கொடுப்பதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடலுக்கு கடும் கோடை வெப்பத்தை சமாளிக்க எலக்ட்ரோலைட்கள் தேவை. அதற்கு இந்த பானங்கள் உதவும். அவை என்னவென்று பாருங்கள்.

இளநீர் அல்லது தேங்காய்த் தண்ணீரை பருகுவது உங்கள் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வழங்கும். உங்கள் உடல் வெயிலால் ஏற்படும் வியர்வை மற்றும் உடற்பயிற்சிகளால் இழக்கும் நீர்ச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ளச் செய்யும். எனவே கோடை முழுவதும் தினமும் இளநீர் பர...