இந்தியா, ஏப்ரல் 12 -- நீங்கள் தசைகளை வலுப்படுத்த வேண்டுமெனில், அதற்கு பழங்கள் உங்கள் மனதில் முதலில் தோன்றாது. எனினும், சில பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை உங்கள் தசைகளை வலுப்படுத்த உதவுபவையாகும். உங்கள் தசைகளை வலுப்படுத்த நீங்கள் சாப்பிடவேண்டிய பழங்கள் என்னவென்று பாருங்கள்.

வாழைப்பழத்தில் பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொட்டாசியச் சத்துக்கள் உங்களின் தசைகள் நல்ல முறையில் இயங்க உதவக்கூடியவையாகும் மற்றும் இது உடற்பயிற்சியின்போது ஏற்படும் வலிகளைத் தடுக்கக் கூடியவை. இவை உங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கின்றன. இதை நீங்கள் உடற்பயிற்சிக்கு முன்னர் எடுத்துக்கொள்ளும் ஒரு சிறந்த ஸ்னாக்ஸாக சாப்பிடலாம்.

கொய்யாப் பழத்தில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. அது உங்கள் தசைகளை சரிசெய்யும் ஒன்றாகும். உங்கள் உடலில் கொலாஜென் ...