இந்தியா, டிசம்பர் 10 -- பள்ளிக் காலத்தில் அன்றாட பாடங்களை படிப்பதுபோன்ற ஒரு சிரமமான விஷயம் ஒன்று இருக்க முடியாது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால், விளையாடவேண்டும், மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றும். உங்களுக்கு படிக்க பிடிக்காதபோது என்ன செய்து உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு படிக்க முயலலாம் என்று பாருங்கள். நாம் பாட புத்தகங்களைப் பார்த்தால், அப்படியே பார்த்துக்கொண்டோ அல்லது எதேனும் திரையை அப்படியே பார்த்துக்கொண்டோ அமர்ந்து இருப்போம். படிக்கத் தேவையான அனைத்தும் அங்கே இருக்கும். ஆனால் படிக்க மாட்டீர்கள். அப்படியே உற்றுப்பார்த்துக்கொண்டே அமர்ந்து இருப்பீர்கள். வேறு எங்காவது மகிழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் படிக்கவேண்டுமே என்று கவலையுடன் புத்தகத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள். அப்போது உங்களுக்கு சிறிய ...