இந்தியா, ஏப்ரல் 25 -- தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. நேற்று உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியதும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விவாதத்துக்கு பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகளை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | சர்ச்சைகளுக்கு இடையே ஆளுநர் நடத்த இருந்த துணை வேந்தர்கள் மாநாடு! ஒட்டுமொத்தமாக புறக்கணித்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும்...