இந்தியா, மே 3 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். நமது தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் மட்டும் கிடையாது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் பல கோயில்களை கட்டி சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளனர்.

எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். சிற்பங்களின் களஞ்சியமாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.

கருவறையை சுற்றி அமைந்திருக்க கூடிய திருச்சுற்று மிகவும் குறுகியதாக இருப்பதாக கூறப்படுகிறது அந்த இடம் புனர்ஜனனி என அழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெ...