இந்தியா, ஏப்ரல் 19 -- மா, பலா, வாழை என்பது முக்கனிகள் ஆகும். அதில் தற்போது எங்கும் பலாப்பழம் கிடைத்து வருகிறது. பழப்பழத்தை நாம் பெரும்பாலும் அப்படியே சாப்பிடுகிறோம். அதில் கேசரி செய்து சாப்பிட முடியும். இனிப்பான இந்த கேசரியை நீங்கள் பண்டிகை காலங்களில் இறைவனுக்கு படைப்பதற்கு செய்துகொள்ளலாம். இதை செய்வதும் எளிது. சில நொடிகளிலே நீங்கள் இந்த கேசரியை செய்து முடித்துவிடமுடியும். விழாக்கள் மற்றும் விருந்துகளில் செய்வதற்கும் இது ஏற்றது. பலாப்பழத்தில் செய்யும் கேசரி கூடுதல் சுவையைக் கொண்டதாக இருக்கும். இது இனிப்புச்சுவை கொண்டதாக மட்டுமின்றி பலாப்பழத்தின் சாறுகள் நிறைந்ததாகவும் இருக்கும். இதில் சேர்க்கப்படும் சர்க்கரையின் இனிப்பு மற்றும் பலாப்பழத்தின் இனிப்பு இரண்டும் சேர்ந்து இந்த கேசரி இன்னும் சுவை அதிகமாக இருக்கும். இதில் சேர்க்கப்படும் நெய், மு...