இந்தியா, ஏப்ரல் 12 -- கோடையில் வறண்ட காற்று, வறட்சி மற்றும் சில கோடைகக் கால மலர்களை மட்டும் கொண்டு வருவதில்லை. கோடைக்காலம் பல பூச்சிகளையும், பல்லி மற்றும் விஷ ஜந்துக்களையும் கொண்டு வருகிறது என்று கூறலாம். இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று பாருங்கள்.

நீங்கள் வீட்டில் பல்லி மற்றும் பூச்சிகளை விரட்டவேண்டும் என்றால் அதற்கு முதலில் உள்ள எளிய மற்றும் சிறந்த வழி என்றால், வீட்டை சுத்தமாக வைக்கவேண்டியது தான். பெருக்கி, துடைத்து தரைகளை சுத்தப்படுத்துங்கள். வீட்டில் வீணான உணவுகள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துங்கள். பாத்திரங்களை சாப்பிட்ட உடனே கழுவிவிடவேண்டும். இதனால் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் துர்நாற்றங்கள் வீட்டில் வீசாமல் இருக்கும்.

மற்றொரு முக்கியமாக யோசனை என்றால், அது வீட்டில் உள்ள துவாரங்கள...