இந்தியா, ஏப்ரல் 29 -- பரசுராம் ஜெயந்தி 2025: பகவான் பரசுராமர் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இந்த நாளில் விஷ்ணு பகவான் வழிபடப்படுகிறார். பரசுராமர் ஜெயந்தி பகவான் பரசுராமரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஸ்கந்த புராணம் மற்றும் பவிஷ்ய புராணத்தின் படி, பரசுராமர் பிரதோஷ கால நேரத்தில் சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாம் நாளில் திரேதாயுகத்தில் பிறந்தார். பகவான் பரசுராமர் சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் தான் பரசுராமர்.

'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பதை நிலைநாட்டிய பரசுராமர் தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் அவர் ஆயுதத்தை பயன்படுத்தவில்லை. ஆனால், முதன்முதலாக பரசுராம அவதாரத்தில்தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகின்றார். பரசுராம...