இந்தியா, மார்ச் 23 -- பரங்கி விதைகள் நீரிழவு நோயைக் கட்டுப்படுத்துவதில் எவ்வாறு உதவுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் சுஸ்மிதா கூறுகிறார். நீரிழிவு நோயாளிகளுக்கு, உங்கள் உடல் போதிய இன்சுலினை சுரக்காததால் உங்களுக்கு இந்த தொல்லைகள் ஏற்படுகிறது. எனவே இந்த பிரச்னையின்போது நீங்கள் உணவு கட்டுப்பாடு செய்யவேண்டும். பரங்கி விதைகள் அதற்கு உதவும். பரங்கி விதையின் முக்கிய நன்மைகளுள் ஒன்று, அது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவது உள்ளது. இது நல்ல ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். முக்கிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இது நீரிழிவு நோயான சர்க்கரையைக் கட்டுப்படுத்த எப்படி உதவுகிறது என்று பாருங்கள்.

பரங்கி விதைகள் என்பது பெபிடாஸ் எனப்படுகிறது. இது பரங்கிக்காயில் உள்ள சாப்பிடக் கூடிய விதைகள் ஆகும். தட்டையாகவும், நீள்வட்ட வட...