இந்தியா, ஏப்ரல் 21 -- அஜித்குமார் மற்றும் அவரது ரேசிங் குழு பெல்ஜியத்தில் நடைபெற்ற Spa-Francorchamps circuit கார் பந்தய போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

இது குறித்து அஜித்குமார் ரேசிங் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து வெளியான பதிவில், ' இந்திய மோட்டார் விளையாட்டிற்கு இது ஒரு பெருமையான தருணம். பெல்ஜியத்தில் Spa-Francorchamps circuit - ல் நடைபெற்ற கார் பந்தைய போட்டியில் அஜித் மற்றும் அவரது குழு குறிப்பிடத்தக்க P2 Podium முடித்தனர். உலகளாவிய கார் பந்தய அரங்கில் ஆர்வம் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக அஜித் ரேசிங் குழு துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by HT Digital Content Services ...