இந்தியா, ஏப்ரல் 24 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை சொல்வார்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. கிரகங்கள் இடமாற்றம் செய்யும் போது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சுபம் மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய இரண்டு ராஜ யோகங்கள் உருவாக உள்ளன. சுக்கிரன் மற்றும் புதன் இந்த ராஜ யோகங்களை உருவாக்க உள்ளனர். சுக்கிர பகவான் ரிஷப ராசியில் நுழைந்து மாளவ்ய யோகத்தை உருவாக்குகின்றார். புதன் பகவான் மிதுன ராசியில் நுழைந்து பத்ர யோகத்தை உருவாக்க உள்ளார். இந்த இரண்டு ராஜ யோகங்களும் ஒர...