இந்தியா, மே 4 -- திருமண பேச்சை வீட்டில் ஆரம்பித்தாலே, முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், அடிக்கடி காதில் விழுவது 10 பொருத்தம். 10-ல் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள்.

ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள். பத்து பொருத்தம் என்றால், 10 விதமான பொருத்ததை குறிப்பிடுகிறது. தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூ (கயிறு) பொருத்தம், வேதைப் பொருத்தம். இவற்றைதான் பத்து பொருத்தம் என்று சொல்வார்கள். (இந்த 10 பொருத்தம் குறித்து விலாவரியாக மற்றொரு பதிவில் பார்ப்போம்)

பத்துக்கு பத்து பொருத்தங்கள், எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கட...