இந்தியா, ஏப்ரல் 23 -- சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அவரது வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் அல்லது ஜாமீன் ரத்து செய்யப்படும்; பதவிக்கும் சுதந்திரத்திற்கும் இடையில் தேர்வு செய்யுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், "ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?" என கேள்வி எழுப்பியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி விஜயகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள் இந்த கேள்வியை முன்வைத்தனர்....