இந்தியா, மார்ச் 8 -- மகாலட்சுமி ராஜயோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அப்போது மங்கள யோகங்கள் மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கம் ஆனது பன்னிரண்டு ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் தற்போதும் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் மார்ச் 7ஆம் தேதி அன்று சந்திர பகவான் மிதுன ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவான் மற்றும் சந்திர பகவான் சேர்க்கை மகாலட்சுமி ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த சுபயோகம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ...