இந்தியா, ஜூன் 28 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் நவக்கிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.

அந்த வகையில் குரு பகவான் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று திருவாதிரை நட்சத்திரத்தில் நுழைந்தார் வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இந்த திருவாதிரை நட்சத்திரம் ராகு பகவானின் சொந்த நட்சத்திரம் ஆகும்.

குரு பகவானின் திருவாதிரை நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக...