இந்தியா, ஏப்ரல் 22 -- பணியிடத்தில் பல வகை மனிதர்களும் இருப்பார்கள். வேலையில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள், அடுத்தவர்களின் தவறுகளை கண்டுபிடிப்பவர்கள், அடுத்தவர்களின் அலுவல்களில் தலையிடுபவர்கள், அடுத்தவர்களைப் பற்றி கிசுகிசு பேசுபவர்கள், அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டுபவர்கள், அனுதாபத்தை எதிர்பார்ப்பவர்கள் என எண்ணற்ற வகை மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் முகமும் உங்களுக்கு தெரியாது. எனவே அலுவலகத்தில் இவ்வாறு நடந்துகொள்பவர்களிடம் இருந்து விலகியிருப்பது அலுவலகத்தில் நீங்கள் நிம்மதியான பணி செய்யும், உங்கள் உள அமைதி மேம்பட்டு, உங்களின் பணி சிறக்கவும் உதவும்.

உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் ஆபத்தானவர்கள் என்றால், நீங்கள் அவர்களிடம் எதுவும் பேசக்கூடாது. உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அலுவலகத்தில...