இந்தியா, மார்ச் 10 -- திண்டுக்கல், நாகல்நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா கட்சி கொடி வெள்ளி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுகூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது, "பல முறை திண்டுக்கல் வந்துள்ளேன். திண்டுக்கல் என்றாலே அது கேப்டனின் கோட்டை. திண்டுக்கல்லுக்கு விஜயகாந்த் உடன் எப்போது வந்தாலும் மக்கள் வெள்ளத்தில் தான் சென்றுள்ளோம்.

தேர்தல் நேரத்திலும், பிரச்சாரத்திலும் கூட்டத்துக்கு சென்றாலும். விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கிறார். விஜய்காந்த் மறைந்த போது கருடன் வட்டம் மிட்டது. அதே போல விஜய்காந்த் நினைவகத்தில் தினமும் கருடன் வட்டம்...