இந்தியா, ஜூன் 6 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது புதன் பகவான் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று தனது நட்சத்திர இடமாற்றத்தை செய்தார்.

புதன் பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். புதன் பகவானின் கிருத்திகை நட்சத்திர பயணம் பல பலன்களை அனைத்து ராசிகளு...