இந்தியா, ஜூன் 4 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவக்கிரகங்களில் நீதிமான் கிரகமாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.

சனி பகவான் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்த...