இந்தியா, மே 14 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக வழங்கக்கூடியவர் ராகு பகவான். சனி பகவானுக்கு அடுத்தபடியாக இவர் நீண்ட காலம் பயணிக்க கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவருக்கு சொந்த ராசி கிடையாது.

தற்போது ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே 18ஆம் தேதி என்று தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார். 18 மாதங்களுக்குப் பிறகு தனது ராசி மாற்றத்தை ராகு பகவான் செய்கின்றார். இந்நிலையில் ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கின்றார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை இதே கும்ப ராசியில் பயணம் செய்வார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அன...