இந்தியா, ஏப்ரல் 23 -- மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தொடரும். இந்தப் படத்தில் மோகன்லால் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஷோபனாவுடன் நடிக்க உள்ளார். இருப்பினும், படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி சமீபத்தில் ரெட் எஃப்.எம் உடனான ஒரு நேர்காணலில், ஷோபனாவை நடிக்க வைப்பதற்கு முன்பு, ஜோதிகாவிடம் படத்தின் கதையை கூறியதாகவும் அந்தப் படத்தில் ஜோதிகா நடிக்காமல் போனதால் தான் ஷோபனாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க| 10 லட்சம் தான் பட்ஜெட்.. நடிகர்களே இல்லாமல் ஏஐ மூலம் 6 மாதத்தில் தயாரிக்கப்பட்ட படம்! ஆச்சரியமா இருக்கா?

இதுகுறித்து தருண் பேசுகையில், "தொடரும் படத்தில் நடிக்க முதலில் ஷோபனாவைத் தான் தேர்வு செய்தோம். இருந்தாலும், அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை எ...