இந்தியா, ஏப்ரல் 27 -- ஜோதிடத்தின் படி, வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீடு அல்லது அலுவலகத்தில் நேர்மறை ஆற்றல்களை கொண்டுவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆன்மிக ரீதியாக பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்தவகையில் இப்போது இந்த பச்சை கற்பூரத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை கற்பூரத்தின் வாசனை வீட்டில் மகாலட்சுமியின் அருளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் நடைபெறும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் பச்சை கற்பூரம் இருக்க வேண்டும். பச்சை கற்பூரத்துக்கு பணத்தை ஈர்...