இந்தியா, ஏப்ரல் 10 -- Murugan Lullaby Song: அறுபடை வீடு கொண்டு தமிழ் மக்களின் ஆதி கடவுளாக எழுந்து வருபவர் முருக பெருமான். உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த வருகின்றார். முருகன் மீது கொண்ட பக்தியின் காரணமாக பல தமிழ் இலக்கிய பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி உள்ளன. பல அறிஞர்கள், சித்தர்கள் என அனைவரும் முருகப்பெருமானை புகழ்ந்து பாடியுள்ளனர்.

மேலும் படிங்க| தமிழ் புத்தாண்டு முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

தற்போது தொழில்நுட்பம் உச்சத்தில் இருந்தாலும் முருகப்பெருமான் மீது கொண்ட பக்தி குறையாமல் இன்றும் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் முதல்முறையாக தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 'கந்தன் ஆரிரோ' என்ற முருகன் தாலாட்டு பாடல் உருவாக்கப்பட்ட...