இந்தியா, பிப்ரவரி 27 -- தினமும் காலை நேரத்தில் நான் சாப்பிடும் உணவை நமது முழு நாளுக்கான ஆற்றலையும், இயக்கத்தையும் வழங்குகிறது. எனவே காலை உணவு சரியாக இருக்க வேண்டுமென உணவு நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். நமது நாட்டில் வழக்கமாக சாப்பிடும் காலை உணவாக இட்லி, தோசை மற்றும் வெண்பொங்கல் போன்ற உணவுகள் உள்ளன. சில சமயங்களில் இந்த உணவுகள் நமக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கலாம். நமது வீட்டில் உள்ளவர்களும் குழந்தைகளும் இந்த வழக்கமான உணவுகள் வேண்டாம் எனக் கூற வாய்ப்பு உள்ளது. எனவே இதனை சரி செய்ய நாம் அடிக்கடி புதுவிதமான உணவுகளை முயற்சி செய்து அவர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டும். அதற்காகத்தான் இன்று பாசிப்பருப்பை வைத்து செய்யக்கூடிய சுவையான அடை செய்முறையை இங்கு காண உள்ளோம். இதனை உங்கள் வீட்டில் செய்து கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சி படுத்துங்கள்.

ஒரு கப் ப...