Chennai, ஏப்ரல் 23 -- இதுதொடர்பாக திராவிட கழக தலைவர் கி. வீரமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "தாய்க்கழகத்தில் ஒருவன் என்ற முறையில், சுட்டிக்காட்டுவது எமது கசப்பான கடமையாகும். சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் நா.எழிலன் சட்டப்பேரவையில், மூடநம்பிக்கைகளைத் தடுப்பது பற்றிய அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றை எழுப்பினார். மிகுந்த வேதனையோடும், வருத்தத்தோடும் பதிவு செய்ய விரும்புகிறோம்

அரசாங்கப் பொறுப்பேற்கும் குடியரசுத் தலைவர் முதல் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வரை இந்திய அரசமைப்புச் சட்டப்படி கடமைகளை ஆற்றுவேன் என்று பதவிப் பிரமாணம் எடுத்து, பதவியேற்கிறார்கள். இப்படியான நிலையில், அச்சட்டத்தின் 51-ஏ(எச்)-இன் பிரிவு அடிப்படையில் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவது பற்றிய பகுத்தறிவுக் கேள்வி ஒ...