Coimbatore,chennai,madurai,trichy, மார்ச் 14 -- காரடையான் நோன்பு அல்லது சாவித்திரி விரதம் என்பது திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் இருவரும் கடைபிடிக்கும் ஒரு விரதம் ஆகும். தங்கள் கணவர் மற்றும் எதிர்கால கணவரின் நலனுக்காக அன்றைய நாளில் வேண்டிக்கொள்வார்கள். அன்றைய நாளில் விரதம் இருந்து வெல்ல அடையும், உப்பு அடையும் செய்து சாமிக்கு படைத்துவிட்டு அதை உண்பார்கள். அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

உப்பு அடை மற்றும் வெல்ல அடை இரண்டுக்கும் பச்சரிசி மாவு மற்றும் தட்டைப்பயறு மிகவும் முக்கியமானது. அடைக்கு தேவையான மாவை முதலில் சலித்த நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். அந்த மாவில் கோலம் போடும் அளவுக்கு பதம் இருக்கவேண்டும். அந்தளவுக்கு வறுக்கவேண்டும். தட்டைப்பயிறையும் வேகவைத்துக்கொள்ளவேண்டும். இந்த இரண்டையும் முதலில் தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டு...