இந்தியா, ஏப்ரல் 16 -- நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே ஏப்ரல் 9 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இந்த வழக்கை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி 2 வது குற்றவாளியாகவும் சிபிஐ தனது வழக்கு விசாரணையில் குறிப்பிட்டுள்ளது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...