இந்தியா, மே 9 -- சிறப்பு விருந்திரனாக பங்கேற்கும் சிவகார்த்திகேயன்.. சரிகமப கிராண்ட் பைனலில் காத்திருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ZEE தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் படிக்க | Zee Tamil Serials: அதிரடி மாற்றங்களுடன் ஜீ தமிழ் சீரியல்கள்.. திங்கள் முதல் காத்திருக்கும் ட்ரீட்..

குறிப்பாக தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மக்கள் மத்தியில் பெருங்கவனம் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியானது வரும் ஞாயிறு மாலை 4:30 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ் மற்றும் மஹதி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றில் மோதிக்க...