இந்தியா, ஏப்ரல் 5 -- நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கோலிவுட் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நாக வம்சி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அவரது ரசிகர்களுக்கு மறைமுகமாக கூறியுள்ளார். மாட் ஸ்கொயர் படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர், இந்தத் தகவலை ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.

மேலும் படிக்க: முத்துவேல் பாண்டியன் பராக்.. நேர்க்கோட்டில் நெல்சன்.. ஜெயிலர் 2 அப்டேட்

இதுதொடர்பாக நடிகர் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், "வம்சியைப் பற்றி அதிகம் பேசினால், அவருக்கு 'திஷ்டி' (திருஷ்டி) பட்டுவிடும். அவருக்கு நல்லது நடக்கப் பழகிவிட்டது. எனவே, நாங்கள் விரைவில் இணைந்து ஏதாவது ஒரு படம் செய்யப் போகிறோம். அவர் விரைவில் அதை அறிவிப்பார். நாங்கள் அறிவிக்கும் நாளில், நாக வம்சியே உங்களுடன் படத்தைப் பற்றி பேசுவார்" என்றார்.

கடந்த மாதம், பிங...