இந்தியா, ஏப்ரல் 20 -- கல்யாண விருந்து நெய் ரவா கேசரி என்பது பாரம்பரியமாக தென்னிந்திய கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் கேசரி ஆகும். இதை நாம் செய்யும் சிலவற்றை மனதில் கொண்டால் கல்யாண விருந்து கேசரியை வீட்டிலேயே செய்ய முடியும். இது நீங்கள் வீட்டில் செய்யும் வழக்கமான கேசரி போல் இருக்காது. இது மிருதுவாகவும், வாயில் வைத்தவுடன் கரைந்து ஓடும் அளவுக்கும் இருக்கும். இதை இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையில் செய்தால் அப்படியே கல்யாண விருந்தில் பரிமாறப்படும் கேசரியின் சுவை கிடைக்கும். பொதுவாகவே கல்யாண விருந்தில் பரிமாறப்படும் உணவுகளின் சுவையை அடித்துக்கொள்ளவே முடியாது. அதில் இந்த கேசரியும் ஒன்றாகும். இந்த கேசரியை நீங்கள் வீட்டிலே செய்வது எப்படி என்று பாருங்கள்.

* தண்ணீர் - 2 கப்

* ரவா - ஒரு கப்

* நெய் - கால் கப்

* முந்திரி - 25

* பாதாம் - 5

* பிஸ்...