இந்தியா, ஜூன் 10 -- இன்ஸ்டன்ட் நீர் தோசை செய்வது எப்படி என்று பாருங்கள். அதற்கு பொட்டுக்கடலையை வைத்து செய்யும் சட்னி ரெசிபியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பச்சரிசி - ஒரு கப்

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - சிறிதளவு

1. பச்சரிசி ஓரிரவு அல்லது 6 மணி நேரம் குறைந்தபட்சம் ஊற வேண்டும். ஊறியதை தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

2. அதை நல்ல தண்ணீராகக் கரைத்துக்கொள்ளவேண்டும். கரண்டியில் மாவு ஒட்டாத அளவுக்கு இருக்கவேண்டும்.

3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானவுடன், இந்த மாவை ஒரு குழிக்கரண்டியில் எடுத்து ரவா தோசை போல் ஊற்ற வேண்டும். இதை மிக மொத்தமாக ஊற்றக்கூடாது. மெல்லிசாக வார்த்து எடுக்க வேண்டும்.

4. சுற்றி...