இந்தியா, ஏப்ரல் 11 -- சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள், இரவில் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் சாப்பிட்டால் நல்லது என்று மருத்துவர் கு.சிவராமன் கூறுகிறார். அது என்னவென்று பாருங்கள். அதில் முதலாவதாக அவர் கூறுவது சம்பா ரவை கிச்சடி உள்ளது அல்லது சிறுதானிய அடை அல்லது கோதுமை சப்பாத்தி மற்றுல் தால் சாப்பிடுங்கள் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார். அதில் அவர் கூறும் கோதுமை ரவை கிச்சடியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* கோதுமை ரவை - ஒரு கப்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* நெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* கடலை பருப்பு - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கி...