இந்தியா, மார்ச் 20 -- நீச்சபங்க யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். நவகிரகங்கள் சில நேரங்களில் இடமாற்றம் செய்து யோகத்தை உருவாக்கி மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அன்று புதன் பகவான் மீன ராசிக்கு சென்றார். புதன் பகவான் மீன ராசியில் நுழைந்ததால் நீச்சபங்க ராஜயோகம் உருவானது. அதேசமயம் மீன ராசியில் தான் சுக்கிர பகவானும் பயணம் செய்து வருகின்றார். இதனால் இரட்டை நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த இரட்டை நீச்சபங்க ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து...