இந்தியா, டிசம்பர் 10 -- ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவே...