இந்தியா, ஏப்ரல் 24 -- காலநிலை காரணமாக விமானங்கள் தாமதமடைவது அல்லது ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். இது போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் விமானத்தில் செல்ல காத்துக் கொண்டிருக்கும் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து வெளியான அறிக்கை ஒன்றின் படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ஏறத்தாழ 25,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னால் மோசமான வானிலை, இயற்கை பேரழிவுகள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் உட்பட பல காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்று விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகள் கவலைப்படத் தேவையில்லை. டிக்கெட் பணத்தை இழந்துவிடுவோம் என்று சந்தேகிக்க தேவையில்லை. இது தொடர்பாக இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ...