இந்தியா, மே 6 -- அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை என்றால், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க:- 'TTF வாசன் மீது உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!'

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில், எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை, மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியதாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை...