இந்தியா, ஜூன் 12 -- உயிரியல் அறிவியல் (லைஃப் சயின்ஸஸ்) துறையின் முன்னணி ஏஜென்டிக் ஏ.ஐ. (Agentic AI) பார்ட்னராக திகழும் அஜிலிசியம் நிறுவனம், அந்நிறுவனத்தின் ஆரம்ப நாட்கள் முதல் இன்று வரை நீண்டகாலமாக பணியாற்றி வரும் 25 ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அனைவருக்கும் ஹூண்டாய் கிரெட்டா (SUV) கார்களை பரிசளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நிறுவனத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, சென்னை உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அஜிலிசியம் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வ தருணங்களை பகிர்ந்துகொண்டனர். ஊழியர்களின் நம்பிக்கையையும் உறுதியையும் கௌரவிக்கும் இந்த பாராட்டு நிகழ்வு, அஜிலிசியம் கடைபிடித்து வரும் மனிதர் மையக் கலாசா...