இந்தியா, மார்ச் 26 -- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு விதமான பிரபலமான ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான ஊர்களுக்கு அதன் பிரபலம் என்று கூறினால் ஒரு உணவு வகை இருக்கும். அந்த அளவிற்கு தமிழர்கள் உணவு மீது மிக நீண்ட கலாச்சார வரலாற்றை கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் மதுரை சமையல், செட்டிநாடு சமையல், திருநெல்வேலி தென்னாட்டு சமையல் என பலவகையான சமையல் வகைகளும் உணவு வகைகளும் உள்ளன. இந்த உணவுகள் அதற்கு ஏற்ற தனித்துவமான முறையில் செய்யப்படுவதே இதன் சிறப்பாகும். இதன் காரணமாகவே ஒவ்வொரு விதமான உணவுகளும் ஒரு தனிப்பட்ட சுவையுடன் இருக்கின்றன. இந்த வரிசையில் நாமக்கல் சமையல் வகைகளும் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகையாக இருந்து வருகிறது. இன்று நாம் நாமக்கல் முட்டை குருமா எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்க போகிறோம். சூடான சாதத்தோடு இந்த முட்ட...