இந்தியா, மே 19 -- இந்தியாவில் இது கோடைக்காலம் ஆகும். இந்த நேரத்தில் நாவல் பழங்கள் வரும். அதன் துவர்ப்பு சுவைக்காக மட்டுமின்றி, அதன் விதைகளின் மருத்துவ குணங்களுக்காகவும் நீங்கள் அதை சாப்பிடவேண்டும். நாவல் விதைகளின் பொடியை சாப்பிடுவதால், குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் உடல் நலனுக்கும் நல்லது. நீங்கள் ஏன் வெறும் வயிற்றில் நாவல் பழ விதையின் பொடியை சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நாவல் பழ விதையின் பொடி உங்கள் உடலின் இன்சுலின் சென்சிட்டிவிட்யை மேம்படுத்தும். ரத்த சர்க்கரை உயர்வைக் கட்டுக்குள் வைக்கும். நீரிழிவு நோயை முறையாகப் பராமரிக்கும். நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதற்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் இதை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

நாவல் விதைப் பொடியில் உள்ள உ...