இந்தியா, ஏப்ரல் 2 -- கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் நம்மை பல விதங்களில் பாதித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிலர் குளிர் பானம், குளிரூட்டி இருக்கும் அறை என பல மாற்று வழிகளை தேடுகின்றனர். ஆனால் நாள் முழுவதும் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இருப்பதும் ஆபத்து தான். இந்த அதிகப்படியான ஏசி பயன்பாடு உங்கள் சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் ஏர் கண்டிஷனிங் (ஏசி) பொருத்தப்பட்ட அறையில் இருப்பதால் வரும் பிரச்சனைகளை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன.

இது தொடர்பாக ஃபைகரிங் அவுட் வித் ராஜ் ஷாமானி போட்காஸ்டின் நேற்றைய (ஏப்ரல் 1) எபிசோடில் , தோல் மருத்துவர் மஞ்சோத் மார்வா ஏசி சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தார். ஏசி காற்று வறண்டு, சருமத்தில் நீரிழப்பு மற்றும் வறட்சிக்கு வழிவக...