இந்தியா, மே 14 -- வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, மே 15 ஆம் தேதியான நாளை (வியாழக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் மேஷம் முதல் கன்னி வரை நாளை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்கு தொழில், வியாபாரம் இரண்டும் இணைந்து செயல்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீடு கட்டுதல், நிலம் பேரம் பே...