தமிழ்நாடு,சென்னை,மதுரை,கோவை,ஈரோடு,சேலம்,திருச்சி, மே 13 -- நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் வசதியான குடும்பங்களை இளைஞர்கள் கும்பல் பெண்களை காதல் ஆசை காட்டி அழைத்து வந்தனர். தங்களை நம்பி வந்த பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வந்தது அம்பலமானது. இதில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ...