இந்தியா, மார்ச் 9 -- நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும், 7 மாநில முதலமைச்சர்களை நேரில் சந்திக்கவும் திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக குரல் எழுப்பவும், 7 மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து குரல் எழுப்பவும் எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சிகளுக்கு துணை நின்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகா...