இந்தியா, ஏப்ரல் 4 -- நடிகரும் பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி, 'எல்2: எம்புரான்' என்ற மலையாள திரைப்படத்தின் மறுசீராய்வுக்கு சென்சார் போர்டு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். பல காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் இந்தப் படம், வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க| மீண்டும் தணிக்கை.. வலதுசாரி எதிர்ப்பு.. எம்புரான் படத்தில் 17 கட்கள் செய்ய முடிவு..

எம்புரான் படத்திற்கு வலதுசாரிகளிடமிருந்து தொடர் எதிர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள் மறுசீராய்வுக்குச் சென்றனர். இந்த சூழலில் அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.

"எம்புரான் படத்தின் தயாரிப்பாளர் மீது சென்சார் அழுத்தம் எதுவும் இல்லை. படத்தின் தொடக்கத்தில் உள்ள எனது பெயரை நீக்கக் கேட்ட முதல் நபர் ...