இந்தியா, ஏப்ரல் 17 -- திருநெல்வேலியில் சாதிய மோதல்களே இல்லை என சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார். "திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகளும், சாதி ஆணவக் கொலைகளும், குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் அதிகம் நடக்கும் மாவட்டமாக உள்ளது" என்ற அவர், "திருநெல்வேலியில் சாதிய மோதல்கள் நடக்கவில்லை" என்று சபாநாயகர் அப்பாவு கூறியது, "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது" என்று சபாநயாகரின் இந்த பேச்சு...